பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த தாயும் - சேயும்! வெளியான அதிர்ச்சி காரணம்
தமிழகத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வீட்டியிலேயே பிரசவம் பார்த்த நிலையில் தாய், சிசு இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வசந்தி என்ற பெண் 6வது முறையாக பிரசவித்த ஆண் குழந்தை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதேவேளை, பிரசவித்த போது அதிக ரத்தப் போக்கு போகவே, குறித்த பெண்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தான் தாயும், சேயும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டில் வாளியில் கிடத்தப்பட்ட நிலையில், கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு சிசுவின் சடலம் இருந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.