முல்லைத்தீவில் பயங்கரம்; கண்டுகொள்ளாத பொலிஸார்!
முல்லைத்தீவு - முள்ளியவளை தெற்குப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.
சம்பவத்தில் முள்ளியவளை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32 வயதுடைய பெருமாள் சதீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதேசமயம் சம்பவம் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கிராமத்தவர்கள் தெரியப்படுத்தியும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் உயிரிழந்த கும்பஸ்தரின் சடலம், மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலு ம் இந்த மோதல் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.