இலங்கையில் பயங்கர துப்பாக்கிச் சூடு; ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் இன்று (14) மாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
அஹுங்கல்ல மித்தரமுல்லை அமரமொழி மாவத்தையைச் சேர்ந்த எனாந்து தரிந்து தனுஷ்க நிசன்சல டி சில்வா என்ற 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மாலை 6 மணியளவில் உறவினர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட தருணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஐந்து வயது மற்றும் ஒன்றரை வயதுடைய இரு பிள்ளைகளும் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர் தொழில் ரீதியாக காவலாளி எனவும், அவர் அஹுங்கல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரின் மகளை திருமணம் செய்யவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.