மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை... இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
மத்திய கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ள மோதல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு அங்கு தங்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் தங்கியுள்ள இலங்கையர்கள் குறித்து தூதரகங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல்களால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வர விரும்பும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் மோதல்கள் காரணமாக இதுவரையில் எந்தவொரு இலங்கையர்களும் இலங்கைக்கு வருமாறு கோரவில்லை என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.