ருவன்வெலிசாய போராட்டத்தில் அமைதியின்மை ; இருவர் கைது
அநுராதபுரம் - ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுர புனித பூமியின் பாதுகாப்பு மற்றும் ருவன்வெலிசாயவைச் சுற்றியுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் பிக்குகள் குழுவினர் அநுராதபுரத்தில் மீண்டும் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் மற்றும் ஏனைய போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.