மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேடானது நேற்றிரவு திடீரென பற்றியெரிந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையமானது கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. அந்த குப்பை மேட்டில் திடீரென நேற்றிரவு தீ பற்றியது.

இதன்போது தீயணைப்பு வாகனங்கள் என்பன பயன்படுத்தி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குப்பை மேட்டில் கடந்த காலங்களில் எந்தவிதமான தீ விபத்துகளும் ஏற்படவில்லை.
கடந்த காலங்களில் சீரான தரம்பிரித்தல் மற்றும் பாதுக்காப்பு முறை காரணமாக இவ்வாறு தீபத்து ஏற்படவில்லை எனவும், தற்போது சீரான முறையில் கழிவுப் பொருட்கள் தரம்பிரிப்பு இடம்பெறாத காரணத்தாலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குப்பை மேடானது தமது குடியிருப்புக்கு அண்மையில் காணப்படுவதாலும், பிரதேச சபையினர் தற்போது அதனை சீராக பராமரிக்காத காரணத்தாலும் தாங்கள் தினமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.