கடும் பதற்றத்தில் தென்னிலங்கை ; நீதிமன்றத்துக்கு வெளியே திரண்ட ரணில் ஆதரவாளர்கள்
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டுகொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று பிற்பகல் 01.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் நிறைந்துள்ளனர். எனவே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.