நாடாளுமன்றம் அருகே பதற்றமான சூழல்
நாடாளுமன்ற நுழைவு வாயிலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவும்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, எதிர்ப்பாளர்கள் சிலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிந்திய தகவல்
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரின் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

