சாம்பியன் பட்டத்தை வென்ற யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை!
இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட ரிட்ஸ்பறி அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான டென்னிஸ் டென்ஸ் சுற்றுப் போட்டியில் சிறுமிகளுக்கான சிவப்பு பந்து பிரிவில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை அணி சம்பியனானது.
குறித்த பிரிவில் களுத்துறை மகளிர் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், கொழும்பு விசாக்கா வித்தியாலயம் 3ஆம் இடத்தையும் பெற்றன. சிவப்பு பந்து சிறுவர்கள் பிரிவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லுரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
அப் பிரிவில் கொழும்பு ஆனந்த கல்லூரி சம்பியனானதுடன் காலி றிச்மண்ட் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது. சிறுவர்களுக்கான பச்சை, சிவப்பு, செம்மஞ்சள் ஆகிய பந்துகளைக் கொண்ட 3 பிரிவுகளிலும் ஆனந்த கல்லூரி சம்பியனானது.
டென்னிஸ் டென்ஸ் என்பது ஒவ்வொரு அணியிலும் 10 வீரர்கள், 10 வீராங்கனைகள் பங்குபற்றும் போட்டியாகும்.
சிறுவர்களுக்கான பச்சை பந்து பிரிவில் குருநாகல் மலியதேவ கல்லூரி 2ஆம் இடத்தையும், கல்கிஸ்ஸை சென் தோமஸ் 3ஆம் இடத்தையும் சிறுமிகளுக்கான பச்சை பந்து பிரிவில் கொழும்பு விசாக்கா வித்தியாலயம் சம்பியன் பட்டத்தையும் கொழும்பு மியூஸியஸ் கல்லூரி 2ஆம் இடத்தையும் களுத்துறை மகளிர் மகா வித்தியாலயம் 3ஆம் இடத்தையும் பெற்றன.
சிறுவர்களுக்கான செம்மஞ்சள் பந்து பிரிவில் கொழும்பு ஆனந்த கல்லூரி சம்பியனானது.
பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் கல்லூரி 2ஆம் இடத்தையும் கொழும்பு நாலந்த கல்லூரி 3ஆம் இடத்தையும் பெற்றன.
சிறுமிகளுக்கான செம்மஞ்சள் பந்து பிரிவில் கொழும்பு மகளிர் கல்லூரி சம்பியனானதுடன் விசாக்கா வித்தியாலயம் 2ஆம் இடத்தையும் பாணந்துறை சென் ஜோன்ஸ் பெண்கள் கல்லூரி 3ஆம் இடத்தையும் பெற்றன.
கொரோனா தொற்றுநோய் தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த இந்த சுற்றுப் போட்டி 2 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்டது.
நாடு முழுவதிலுமிருந்து 121 பாடசாலை அணிகளைச் சேர்ந்த 1210 மாணவஇ மாணவிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.