ஆலயம் சென்று திரும்பியவருக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுத்த கடவுள்! லொத்தர் சீட்டில் 10 கோடி ரூபாய்
கேரளாவில் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவருக்கு, கேரள அரசின் 'சம்மர் பம்பர்' லொத்தர் சீட்டில் 10 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) பரிசாகக் கிடைத்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், பரப்பனங்காடியைச் சேர்ந்த 51 வயதான நதுவெட்டில் பத்மநாபன் என்பவர், கடந்த 8 ஆண்டுகளாக கோழிச்சேனாவில் உள்ள குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சிபல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

லொத்தர் சீட்டு வாங்கும் பழக்கம் இல்லாத பத்மநாபன்
வழக்கமாக லொத்தர் சீட்டு வாங்கும் பழக்கம் இல்லாத பத்மநாபன், அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
தரிசனம் முடிந்து கடந்த மார்ச் 26 ஆம் திகதி கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு நோக்கிச் சென்றபோது, தற்செயலாக 250 ரூபாய் மதிப்புள்ள கேரள அரசின் 'சம்மர் பம்பர்' லொத்தர் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, பத்மநாபன் வாங்கிய SB 517026 என்ற இலக்கமுடைய சீட்டிற்கு முதல் பரிசான 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத இந்த இமாலயப் பரிசுத் தொகையினால் பத்மநாபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை பத்மநாபன் பரப்பனங்காடியில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கி மேலாளரிடம் ஒப்படைத்து, பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
ஒரு சாதாரண பல்பொருள் அங்காடி ஊழியராகத் தனது வாழ்க்கையை நகர்த்தி வந்த பத்மநாபனின் வாழ்வில், இந்த அதிர்ஷ்டம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.