அறைந்து விடுவேன் என சொல்லுங்கள்; துண்டு சீட்டு அனுப்பிய செலன்ஸ்கியால் கடும் கோபத்தில் புடின்!
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) அடிப்பேன் என ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செலன்ஸ்கி அனுப்பிய ஒரு துண்டு சீட்டுதான் ரஷ்ய அதிபர் புடினின் கோபத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி ஒருமாதம் கடந்துள்ள நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் நடக்க உள்ளது. உக்ரைன் இந்த பேச்சுவார்த்தையில் நடுநிலை நாடாக இருக்க சம்மதம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
போர் தொடங்கியதில் இருந்தே இதில் ரஷ்யா நாட்டின் பணக்காரரும் செல்சியா கால்பந்து நிறுவன தலைவருமான ரோமன் அப்ரமோவிச் (Roman Abramovich) மத்தியஸ்தம் பேசி வருகிறார்.

போர் தொடங்கியதில் இருந்தே இரு நாடுகளுக்கு இடையில் இவர்தான் தூதுவர் போல செயல்பட்டு வருகிறார். துருக்கி, உக்ரைன், ரஷ்யாவிற்கு அடிக்கடி மாறி மாறி சென்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தி வருகிறார்.
அதேவேளை அதிபர் புடினுக்கு (Vladimir Putin) மிகவும் நெருக்கமானவர் இவர் என்பதுடன், ரஷ்யாவின் அலிகார்க்ஸ் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் சமீபத்தில் இவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இவர் கீவ் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பின் இவருக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு விக்ஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான் ரோமன் அப்ரமோவிச் (Roman Abramovich)அதிபர் புடினிடம் (Vladimir Putin) உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)கொடுத்ததாக ஒரு துண்டு சீட்டை கொடுத்து இருக்கிறார்.
அதில் போரை நிறுத்த என்னெவெல்லாம் செய்யலாம். என்ன மாதிரியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என உக்ரைன் அதிபர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளதை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்ற புடின் (Vladimir Putin), உக்ரைன் அதிபரிடம் சொல்லி வையுங்கள்.. நான் அவரை அடிப்பேன் என கோபமாக கூறியதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் ரஷ்யா இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை மூன்றாம் கட்டமாக துருக்கியில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.