காதல் உறவுகளினால் சீரழியும் பதின்ம வயது சிறுமிகள்; பெற்றோரே அவதானம்!
காதல் உறவுகளினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனவே தம் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
9 மாதங்களில் 917 சிறுவர்கள் துஷ்பிரயோகம்
அதன்படி இந்த வருடத்தின் கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் 917 சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை கடந்த 2022 வருடத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துக் காணப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 425 ஆகும்.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பையே காட்டுவதாகவும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.