தொல்லியல் திணைக்கள அதிகாரியின் கிண்டலான பதிலால் அதிர்ச்சியில் வலிகாமம் கிழக்கு தவிசாளர்!

police valigamam archaeological department thiyagararajah
By Krishna Mar 30, 2021 06:46 PM GMT
Report

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்விடம் தீவிர விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நிலாவரை பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்க தடை ஏற்படுத்தினார் என தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பேசவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டார்.

அங்கு மல்லாகம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் சுப்பிரின்டன் என்.டபிள்யூ.ஜே.சி. ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் – கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் இருந்தனர்.

தவிசாளர் பெருமளவானவர்களைத்திரட்டி வந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிகளை தடைசெய்துள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அது பற்றி பேசவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர், தொல்லியல் திணைக்களம் எற்கனவே குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யப்போவதாக கூறியிருந்தது. ஆனால் அவர்கள் கட்டிட அத்திவாரம் வெட்டுவது போன்று ஆழமாக கிடங்கினை வெட்டினர்

ஆந்த இடத்தில் கட்டிடங்கள் ஏதாவது அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச சபைக்குரிய பொறுப்புணர்வு பார்வையிட நான் சென்றேன். அப்போது என்னை இராணுவத்தினர் விசாரணை செய்தார்கள்.

இதனால் அங்கே சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டது. மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளில் சந்தேகம் கொள்வதனால் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்பட்டே செயற்பட வேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தினேன்.

அதற்கு பொலிஸ் தரப்பில் இருந்தும் தொல்லியல் திணைக்கள தரப்பிடம் இருந்தும் தொல்லியல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. எனவே இதில் தவிசாளர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர் நிலாவரை விடயத்தில் பிரதேச சபை பகிரங்க கேள்விக்கோரலில் கடந்த பலவருடமாக குத்தகைக்கு வழங்கி வருகின்றது.

எனவே எமக்கும் அப் பிரதேசத்தில் நிர்வாக ரீதியிலான அதிகாரம் உள்ளது என தெரிவித்தபோது தாம் எமக்கு அதிகாரம் கிடையாது என கடிதம் அனுப்பியுள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரியிலானால் கூறப்பட்டது.

அதற்குத் தவிசாளர், தனிச்சிங்களத்தில் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது. நான் அதனை அரச கருமமொழிகள் திணைக்களத்திற்கு முறைப்பாடாக அனுப்பியுள்ளேன்.

வடக்குக் கிழக்கில் அரச கருமமொழி தமிழ் என்பதையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற போது தொல்லியல் திணைக்கள அதிகாரி தாம் அரச அதிபருக்கே சிங்களத்தில் தான் கடிதம் அனுப்புவதாகவும், பெறுபவர்கள் அதனை மொழிபெயர்த்து புரிந்து கொள்வதாகவும் அலட்சியமாக தெரிவித்தார்.

தாம் யாழ் மாவட்டத்தில் சகல இடங்களிலும் பணிகளை செய்கின்றோம், அங்கு எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்குதான் பிரச்சினை என தொல்லியல் திணைக்களத்தினால் அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டது.

மக்களிடத்தில் தங்கள் திணைக்களத்தின் பணிகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதனால் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் கட்டிடங்கள் திருத்தம், புதிதாக அமைத்தல் விடயத்தில் சபை அனுமதி பெறப்படவேண்டியது சட்டமாகும் எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் தரப்பும் தொல்லியல் திணைக்களத்தரப்பும் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்குள் எவரும் தலையிடக்கூடாது எனவும் தவிசாளர் தான் மக்களை அழைத்து வந்து குழப்புகின்றார் என்றனர்.

தவிசாளர் ஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு தவிசாளர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நீதிமன்றத்திற்கு விடயம் பாரப்படுத்தப்படுவதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பொலிஸ் தரப்பினால் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டிற்கான பதில் அறிக்கை தன்னிடம் பெறப்பட்டதாகவும்,. யார் கூறி நிலாவரைக்கு வந்தேன்.

நிலாவரையில் நின்ற வண்ணம் யார் யாருடன் தொலைபேசியில் பேசினேன், என்ன பேசினேன் என தனிமனித சுதந்திரத்திற்குப் புறம்பான விசாராணைகளும் நடைபெற்றதாக வலிகாமம் கிழக்கு தவிசாளர் தி.நிரோஷ் குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US