யாழில் கொட்டும் மழையிலும் ஆசிரியர்கள் போராட்டம்! ஆளுநருக்கு எதிராகப் பலத்த குற்றச்சாட்டு

Jaffna Northern Province of Sri Lanka Education Nagalingam Vedanayagam
By Sulokshi May 15, 2026 12:10 PM GMT
Report

 வட மாகாணத்தில் ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களைக் கண்டித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பாரிய கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன், மாகாணக் கல்வி நிர்வாகம் மற்றும் ஆளுநருக்கு எதிராகப் பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், இதன்போது அவர் கூறுகையில்,

யாழில் கொட்டும் மழையிலும் ஆசிரியர்கள் போராட்டம்! ஆளுநருக்கு எதிராகப் பலத்த குற்றச்சாட்டு | Teachers Protest In Jaffna Amidst Pouring Rain

ஆளுநருக்கு எதிராகப் பலத்த குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகள் வட மாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்; அச்சத்தில் மக்கள்!

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்; அச்சத்தில் மக்கள்!

தங்களுக்கு வேண்டியவர்களையும், ஆளுங்கட்சிக்குச் சார்பானவர்களையும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளிலேயே தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, தீவகம் மற்றும் மருதங்கேணி போன்ற கஷ்டப் பிரதேசங்களில் நீண்டகாலம் சேவையாற்றிய ஆசிரியர்களை மீண்டும் பழிவாங்கும் நோக்குடன் வெளிமாவட்டங்களுக்குத் திட்டமிட்ட முறையில் இடமாற்றம் செய்கின்றனர்.

இந்த முறைகேடான இடமாற்றங்கள் குறித்து வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் சுட்டிக்காட்டியும், அவர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவே ஆளு துணை நிற்கிறார்.

யாழில் கொட்டும் மழையிலும் ஆசிரியர்கள் போராட்டம்! ஆளுநருக்கு எதிராகப் பலத்த குற்றச்சாட்டு | Teachers Protest In Jaffna Amidst Pouring Rain

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறித்துப் பேசப்பட்டபோது, “இந்த இடமாற்றத்தை செய்தே தீர வேண்டும்” என ஆளுநர் முண்டியடித்துக்கொண்டு கூறியமை எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் (A/L Science) ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடமே இல்லாத ஒரு கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

யாழில் கடும் மழையால் வேரோடு சாய்ந்த பாரிய மரம்

யாழில் கடும் மழையால் வேரோடு சாய்ந்த பாரிய மரம்

இதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தின் உயர்தர விஞ்ஞானப் பிரிவைத் திட்டமிட்ட முறையில் அழிக்கும் சதித் திட்டம் மறைந்துள்ளது. வெளிமாவட்டங்களுக்கு ஆசிரியர்களைப் பகிர்ந்தளிப்பதை ஆசிரியர் சங்கம் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இதுவரை வெளிமாவட்ட சேவையே செய்யாதவர்கள் அரசியல் செல்வாக்கோடு சொகுசாக இருக்கும்போது, கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றியவர்களை மீண்டும் மீண்டும் பழிவாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

எனவே பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய முறையில் இந்த இடமாற்றப் பிரச்சினைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும் வரை, இந்தத் தொடர் போராட்டங்கள் ஓயாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US