இலங்கையில் பெளத்தம் கற்பிக்கும் ஆசிரியரால் 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த நிலை!
பெளத்தம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான 10ம் வகுப்பு மாணவனின் இடதுபக்க காது பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பதுக்க பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது.
கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் பௌத்தம் கற்பிக்கும் ஆசிரியர் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் மாணவரை ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கும் மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, தாக்குதலில் மாணவனின் இடது காது பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாணவனை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.