பசறை மண்சரிவில் உயிர் பிழைத்த ஆசிரியரின் திகில் அனுபவம்!

Landslide In Sri Lanka Floods In Sri Lanka Social Media Cyclone Ditwah
By Sulokshi Dec 06, 2025 09:45 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளம், புயல் மற்றும் மன்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தங்களினால் இதுவரையில் 607 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த அனர்த்தங்கள் காரணமாக இன்னமும் 214 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பசறை யூரி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு உயிர் பிழைந்த ஆசிரியர் ஒருவர் தனது திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார், அவரது பதிவிலிருந்து,

பசறை மண்சரிவில் உயிர் பிழைத்த ஆசிரியரின் திகில் அனுபவம்! | Teacher Survived Lanka Landslide Horror Experience

யாரை காப்பது? அம்மாவா? மனைவியா? சின்னவளையா?

27ம் திகதி நாங்கள் ஆறு பேரும் வீட்டுக்குள்ளேயே இருந்தோம். மாலை 4.30 மணி இருக்கும். அந்நேரம் கொஞ்சம் கடுமையான மழைதான்.

நான், (இந்து) மனைவி மற்றும் பிள்ளைகள் மூவரும் பாயில் படுத்தவாறு tv பார்த்துக் கொண்டும் மறுபக்கம் சின்னவளின் பரதநாட்டியத்தை குழப்பிக் கொண்டும் இருந்தோம். அப்போது முன்வாசல் கதவின் வழி மழைத்துளி வருவதை தடுக்க மழையில் நனைய சங்கடபட்டவாறு வெளியே சென்றேன்.

நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; இலங்கைக்கான உதவித் தொகையை அதிர்கரித்த பிரித்தானியா!

நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; இலங்கைக்கான உதவித் தொகையை அதிர்கரித்த பிரித்தானியா!

ஒரு கையில் குடையுடன் தகரத் துண்டினை எடுத்து முன் கதவில் சாய்ந்து வைத்தேன்.. அப்போது நீர் குழாயை திறந்தால் மண் கலந்த நீர்.. எனவே குடிப்பதற்கு தேவையான மழை நீரை சேகரிப்போம் என்று பாத்திரங்களை எடுக்க கூறியதால் மனைவி தரையில் இருந்து எழுந்தார். Raincoat ஐ எடுக்குமாறு மகனிடம் கத்தினேன்.

அதனால் அவனும் தரையில் இருந்து எழுந்தான்.. மழை மேலும் அதிகரிக்குமோ என்று கதவை பிடித்தவாறு எட்டி மேல் நோக்கி பார்த்த போது வீட்டின் பின்புறம், கொஞ்சம் தூரத்தில் சேற்று நீர் உயரமாக தெரிப்பது தெரிய.. "எல்லா ஒடுங்க"என்று கத்தியவாறு வீட்டுக்குள் ஓடி பிள்ளைகளை எழுப்பி ஓடும் போது எல்லாம் முடிந்து விட்டது.

பசறை மண்சரிவில் உயிர் பிழைத்த ஆசிரியரின் திகில் அனுபவம்! | Teacher Survived Lanka Landslide Horror Experience

நானும் மனைவியும் சின்னவளும் (பவன்யா) அம்மாவும் இடிபாடுகளுக்குள். மகனும் (மோகுலேஸ்), மகள் (தனன்யா) வெளியே. அவர்களை சேற்று நீரும் கற்களும், மரங்களும் சூழ தவித்து நிற்கிறார்கள்.. உள்ளே மனைவியின் கால்கள் இடிபாடுகளுக்குள்.. எதுவும் செய்ய முடியவில்லை..

சின்னவள் (பவன்யா) தரையில் தரையில். அவளது தலை மட்டும் தெரிகிறது. செல்லத்தை இழுக்க முடியவில்லை.. அம்மாவுக்கும் அப்போது எதுவும் காயங்கள் இல்லை.. ஆனால் அவருக்கு ஒருவரின் துணை இல்லாது அங்கிருந்து வெளியேற முடியாது.. எனக்கு அடிபட்ட போது இடிபாடுகளுக்குள் சிக்கவில்லை.

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக யாழ்ப்பாண தமிழர் நியமனம்; பலரும் வாழ்த்து!

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக யாழ்ப்பாண தமிழர் நியமனம்; பலரும் வாழ்த்து!

ஒருகணம்.. யாரை காப்பது? அம்மாவா? மனைவியா? சின்னவளையா? வெளியே நிற்கும் பிள்ளைகளையா? பேர் செல்ல இருவரையவது காப்போம் என சின்னவளை கடவுளை வேண்டிக்கொள் என்றும் மனைவியை அம்மாவை பார்த்தவாறு உதவிக்கு கத்தியவாறு இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே வந்தேன்..

கடவுள் கொடுத்த, கல்வி கொடுத்த தைரியம்.. பிள்ளைகள் இருவரை பாதுகாப்பற்ற சேற்றிலும் கற்கள், மரங்கள், குப்பைகள் நிறைந்த வழிகளில் இரங்கி, விழுந்து வழிதெரியாமல், வழி உருவாக்கி அதன் வழி மகன் ஒட மகளை கையில் பிடித்து இழுத்தவாறு முன் இருந்த லயன் வீடோன்றின், முன் கதவு வழியே சென்று பின் கதவை திறந்து பிள்ளைகளையும் அந்த வீட்டில் அதுவரை முழங்கால் அளவை தாண்டி நிரம்பிக்கொண்டிருந்த சேற்று வெள்ளத்தையும் வெளியேற்றினேன்.

இருவரும் திரும்பி பார்க்காது கண்ணில் பட்ட ஆட்களை ஓடுங்கள்.. நான் அம்மா, தங்கச்சி, அம்மி (அம்மா) அழைத்து வருகிறேன்.. என்று மரணத்தை எதிர்த்து வந்த வழியே வலியுடன் மீண்டும் விழுந்து, எழுந்து, ஓடி வீட்டிற்கு சென்றேன்.. எதையும் தூக்க, அசைக்க முடியவில்லை..

பலி கேட்கிறதா பருவநிலை மாற்றம்? ஆபத்தில் ஆசிய நாடுகள்!

பலி கேட்கிறதா பருவநிலை மாற்றம்? ஆபத்தில் ஆசிய நாடுகள்!

அசைக்க பயம் தங்கமகள் தரையில்.. அவள் தைரியமானள்.. அவள் அப்போதும் அழவில்லை.. அந்த கணத்தில் உதவிக்கு அருகில் யாருமில்லை.. கையறு நிலை என்பதைப் அனுபவித்து அறிந்தேன்..

மகன், மகள் ஊடாக தகவல் அறிந்தோர் "சேர் செத்தா ஒன்னா சாவோம்.. என்ற வார்த்தைகளோடு அயலவரும் ஊரவரும் துணைக்கு வர செய்த புண்ணியம் அறுவரும் இன்று உயிருடன் இருக்கிறோம்... (எல்லாம் 30 - 40 நிமிடங்களுக்குள் மரண வாசனையை அனுபவித்த போது) என அவர்   தனது திகில் அனுபவத்தை  வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், St. Gallen, Switzerland

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, துணுக்காய், சென்னை, India

05 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
நன்றி நவிலல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Dortmund, Germany

29 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Montreal, Canada, Toronto, Canada, Vancouver, Canada

30 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, வெள்ளவத்தை

04 Dec, 2025
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, வெள்ளவத்தை, மாதகல்

05 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், நோர்வே, Norway

05 Dec, 2015
மரண அறிவித்தல்

கைதடி தெற்கு, கொழும்பு

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இயக்கச்சி

04 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, கொழும்பு, வவுனியா, Southall, United Kingdom, East Ham, United Kingdom

30 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
7ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கிளிநொச்சி, நெதர்லாந்து, Netherlands, London End, United Kingdom

04 Dec, 2018
மரண அறிவித்தல்

நொச்சிமோட்டை, வைரவபுளியங்குளம்

02 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Scarborough, Canada

01 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US