பிரித்தானியாவில் அதிர்ச்சியை எற்படுத்திய ஆசிரியை கொலை: நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளி
ஆரம்பப் பாடசலை ஆசிரியை ஒருவர் லண்டனில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
தெற்கு லண்டனில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் 28 வயதான ஆரம்பப் பள்ளி ஆசிரியையான சபீனா நெஸ்ஸா கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொலை குற்றவாளியான அல்பேனியரான கோசி சொலாமஜ், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஈஸ்ட்போர்னில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெற்கு லண்டனில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் விமர்சனங்களை எழுப்பியது ஆசிரியை மரணம்.
இதேவேளை லண்டனில் உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லண்டனில் உள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து பேரணிகளில் கலந்து கொண்டனர்.
இதேவேளை ஆசிரியை கொலை தொடர்பாக சிசிரிவி காட்சிகள் வெளியிடப்பட்டு, குற்றவாளியை பொலிஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சபீனாவைக் கொலை செய்ததாக, கோசி செலாமஜ் என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை லண்டன் நீதிமன்றத்தில் குற்றவாளியை முற்படுத்தப்பட்ட போது, கொலைக்குற்றச்சாட்டை குற்றவாளியின் தரப்பு சட்டத்தரணி மறுத்துள்ளார்.
இதேவேளை கொலை குற்றவாளியான 36 வயதான கோசி செலாமஜ் சமீப காலம் வரை, அவர் தனது காதலியுடன் அந்த பகுதியில் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே பிரிந்ததாக கூறப்படுகிறது.