பாடசாலை வளாகத்தில் ஆசிரியைக்கு நடந்த கொடூரம் ; 27 முறை குத்திக் கொலை
இந்தியாவின் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலை வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தீவிர விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருதாவது,
உயர்நிலைப் பாடசாலையில் குறித்த ஆசிரியையை முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை பொலிஸில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பாடசாலை வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் சந்தேகநபரைத் பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.