பெண் அதிபரை தாக்கிய ஆசிரியை ; மாணவர்கள் முன்னாள் அரங்கேறிய சம்பவம் ; வைரலாகும் காணொளி
அரச பாடசாலை ஒன்றின் அதிபரை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் ண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

பணிநீக்கம்
இந்தநிலையில், ஆசிரியை சரியாக வேலை செய்யவில்லை என, தலைமை ஆசிரியை அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஆசிரியை வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை, தன் செல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், கரூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கியதாக இடைநிலை ஆசிரியையை பணிநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.