யாழில் ஆசிரியரை கொடூரமாக தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர்!

Sulokshi
Report this article
யாழில் தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்ச சம்பவமானது கடந்த சனிக்கிழமை (22) அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணையின் போது, தாக்குதலை மேற்கொண்ட முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் இன்று (24) அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும் தாக்குதலை நடத்தியவர் ஆஜராகவில்லை என்பதுடன் அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.