பிரபல பாடசாலையில் மாணவி மீது கைவைத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உள்காயங்கள்
இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் ஆசிரியரை இன்று (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உள்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.