பொலிஸ் நிலையத்தில் நடந்த பகீர் சம்பவம்; குற்றசெயல்களை தடுக்க வேண்டியவர்களே இப்படியா!
நுவரெலியா - பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சம்பவம் நேற்று (06) இரவு இடம் பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்துவரும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
இதன்போது பொலிஸார் உத்தியோகத்தர் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளதாகவும் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, மேலும் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கத்திக்குத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு காரியாலயம் மேலும் தெரிவித்தது