தைராய்டு பிரச்சனையை போக்கும் டீ!
தைராய்டு சுரப்பி எனப்படும் தொண்டையில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி உள்ளது. தைராய்டு என்ற ஹார்மோனை உருவாக்குவதே இதன் வேலை. உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு இந்த ஹார்மோன் அவசியம்.
இந்த சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் தைராய்டு ஹார்மோன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தி செய்யப்படுகிறது இது தைராய்டு நோய் என்று அழைக்கப்படுகிறது.
தைராய்டு சுரப்பி அதிக தைராய்டு ஹார்மோனை உருவாக்கும் போது ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. இந்த நிலை ஓவர் ஆக்டிவ் தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது.
உடலின் வளர்சிதை மாற்றம்
ஹைப்பர் தைராய்டிசம் உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இது எடை இழப்பு, கை நடுக்கம் மற்றும் விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற பல அறிகுறிகளை ஏற்படுத்தும்.
ஹைப்போ தைராய்டு என்பது குறைவான தய்ராய்டு ஹார்மோனை உருவாக்குகிறது. இதனால் உடல் எடை மிகவும் அதிகரிக்கிறது.
டீ
தைராய்டு பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற காஃபினேட்டட் டீ/காபிக்கு பதிலாக காஃபின் இல்லாத தைராய்டு நிவாரண மூலிகை டீயுடன் நாளை தொடங்கினால் நன்மை என கூறப்படுகிறது.
ஏனெனில் காலையில் காஃபின் சாப்பிடுவது ஏற்கனவே வீக்கமடைந்த தைராய்டு சுரப்பியில் அதிக வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றம், ஹார்மோன்கள் மற்றும் கருவுறுதலையும் சீர்குலைக்கிறது.
தைராய்டு சிகிச்சை என்ன?
தைராய்டுக்கு மருத்துவத்தில் பல வகையான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் உள்ளன. உண்மையில், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தைராய்டை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். சில உணவுகள் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று நம்பப்படுகிறது
மூலிகை தேநீருக்கான பொருட்கள்
1 கிளாஸ் தண்ணீர் (300 மிலி) 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் 9-12 கறிவேப்பிலை 5-7 உலர்ந்த ரோஜா இதழ்கள்
மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்க்கவும். மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இப்போது மூலிகை தேநீர் தயாராக உள்ளது.
நீங்கள் காலையில் அதை முதலில் குடிப்பது சிறந்த பலனைத் தரும்.
தேநீர் அல்லது காபி குடிக்கும் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபடவில்லை என்றால் தைராய்டு பிரச்சனை அதிகரிக்கலாம்.
தைராய்டு, குடல் அல்லது ஹார்மோன் பிரச்சனைகள் இருந்தால் காஃபினை நிறுத்துவது சிறந்தது. ஆனால் அதை உடனடியாக நிறுத்த முடியாவிட்டால் டீ/காபியில் அரை டீஸ்பூன் நெய் அல்லது 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றுப் பாதிப்பைக் குறைக்கலாம்.
மூலிகை தேநீரின் மற்ற நன்மைகள்
இந்த தேநீர் பல வழிகளில் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஹைப்பர் தைராய்டிசம் உள்ள நோயாளிகளுக்கு இயற்கையாகவே தைராய்டு ஹார்மோன் அளவைக் குறைக்கிறது.
ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு தைராய்டு ஹார்மோன் அளவை மேம்படுத்துதல். இரும்புச்சத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல், சரும வறட்சியைக் குறைத்தல், முடி உதிர்வைக் குறைத்தல் போன்றவை இதன் பிற நன்மைகளாகும்