மதுபானத்துக்கு பதிலாக தேநீர் ; நீதிமன்றில் மாயமான வெளிநாட்டு மதுபானம்
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் மதுபானத்துக்கு பதிலாக தேநீர் ஊற்றி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்ற பதிவாளர் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த முறைப்பட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த சில வெளிநாட்டு மதுபான போத்தல்களை அழிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இதனால், வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த 81 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 150 பியர் போத்தல்கள் அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இதன்போது, வெளிநாட்டு மதுபான போத்தல்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அதில் மதுபானத்துக்கு பதிலாக தேநீர் ஊற்றி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற பதிவாளர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.