யாருமில்லாத கடையில் டீ ஆத்திய பொன்சேகா; கைவிட்ட தென்னிலங்கையர்கள்!
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொட்சேகாவில் கூட்டத்திற்கு பொதுமக்கள்ம் சமூகமளிக்காத நிலையில், அதனை யாருமில்லாத கடையில் டீ ஆத்துகிறீர்களா என சமூகவலைத்தளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜானாதிபதி வேட்பாளர்களாக 39 பேர் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பிட்ட சிலரே பிரசாப்பணிகளில் முன்னரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கண்டுகொள்ளாத தென்னிலங்கையர்கள்
அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வியாழக்கிழமை ( 29 ) அன்று பிற்பகல் அளுத்கம பேருந்து நிலையத்தில் பொது கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் .
இதில் , சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்த போது தேரர் ஒருவர் உட்பட சில பேச்சாளர்கள் மேடையில் இருந்தனர். அவரது கூட்டத்திற்கு போட்டப்பட்டிருந்த கதிரைகள் காலியாகவே இருந்த நிலையில், பொது மக்கள் எவரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேவேளை ஏற்கனவே வேறு பிரதேசங்களிலும் ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் கூட்டத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.