போதைப்பொருள் வீட்டில் மாட்டிக்கொண்ட 3 பொலிஸார்
வீடொன்றில் தங்கியிருந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்னை பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடொன்று தொடர்பில் , வெலிப்பன்னை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்துகம பொலிஸ் கான்ஸ்டபிள்கள்
சம்பவத்தில் மத்துகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரும் ஐஸ் போதைப்பொருளைப் பாவனை செய்வதற்காகக் குறித்த வீட்டில் தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைதான பொலிஸார் வைத்திய பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.