தமிழர்களுக்கு எப்போதும் தீர்வில்லை ; சிங்கள பேரினவாத அடக்குமுறை தொடரும்
2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது? என்ற பெயரில் தமிழ் கட்சிகளின் விவாதங்கள் முன்னெடுத்த போது அந்த விவாதத்தில் கூறும் கருத்துக்களை நாம் இங்கு பார்ப்போம்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் வரை சிறீலங்காவுக்கான ஜனாதிபதித் தேர்தல்களில் சிங்கள மக்கள் சிங்களத் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினதோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது அவற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டினதோ வேட்பாளரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதே வழக்கம்.
ஆனால் இம்முறை, ஜேவிபியின் பிடியிலுள்ள கூட்டு முன்னணியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், ஜேவிபியின் தலைவருமான திரு அனுர குமார திசாநாயக்கவைச் சிங்கள மக்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர்.
இது தமிழ் மக்கள் சிலரின் மத்தியில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தங்களை இடதுசாரிகள் எனக் கூறிக் கொள்ளும் ஜேவிபி, அதற்கு முரணாக சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தமது நடைமுறை அரசியலாகக் கொண்டவர்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பவர்கள்.
ஜேவிபி ஆரம்பம் முதலே தமிழ் மக்களை, குறிப்பாக மலையகத் தமிழர்களை சிறீலங்காவின் மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கான முகவர்கள் எனத் தமது உறுப்பினர்களுக்குப் போதித்து வருபவர்கள்.
சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கே எப்போதும் ஊழியம் செய்யும் என்பதனாலும் அதன் ஒரு அங்கமான 13ம் திருத்தத்தின் மூலமான மாகாண சபை முறைமை தமிழ் மக்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான வலிமை கொண்டதல்ல என்பதனாலும் எமக்கான அரசியற் தீர்வில் இவை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை எனத் தமிழ் மக்கள் மீள மீள வலியுறுத்தி வருவதற்கும் இதுவே காரணமாகும்.
இந்த விடயம் தொடர்பில் சிங்கள பேரினவாத அடக்குமுறை தொடர்ந்து கொண்டே செல்வதால் தமிழர்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என தமிழ் கட்சிகளின் விவாதங்களை இந்த காணொளி மூலம் காணலாம்.