தமிழர்கள் தொடர்பில் கனடா வாழ் சிங்களவர்கள் வெளியிட்ட இனவாத கருத்து!
தமிழர்கள் தொடர்பில் கனடா வாழ் சிங்களவர்கள் வெளியிட்ட இனவாத கருத்துக்கு தென்னிலங்கை மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மைக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது ஈழத் திட்டத்தை இரகசியமாக முன்னெடுத்து வருவதாக கனடா வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை வாழ் சிங்களவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
இந்த செய்திக்கு கீழ் கருத்து வெளியிட்ட சிங்களவர்கள், “ஈழத்தமிழர்கள் நல்லவர்கள் உங்களை விட அவர்கள் எங்களுக்கு சிறந்தவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.
புலி பூச்சாண்டியை மீண்டும் கையில் எடுத்து ராஜபக்ஷக்களை காப்பாற்ற முயற்சித்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர்.
எங்களுக்கு அவர்களை பிடிக்கும். ராஜபக்ஷக்களை விடவும் மோசமான புலிகள் என யாரும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதும் அவ்வாறான கதைகளை கூறி சிங்களவர்களை முட்டாள்களாக்க முடியாது. அதன் மூலம் அப்பாச்சி மீண்டும் நாட்டை ஏற்க வேண்டும் என கூறுகின்றீர்களா என பலரும் கூறியுள்ளனர்.
இன, மத, பேதங்களின் அடிப்படையில் மீண்டும் எங்களை பிரிக்க முடியாதென மக்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.