சாணத்தால் தாக்கி விரப்பட்ட கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார புதன்கிழமை (29) தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்,

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நிதி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து ஹர்ஷண சூரியப்பெரும விலக வேண்டுமென வலியுறுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை (28) பெலவத்தையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக புதிய மக்கள் முன்னணியினர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது, அங்கு வந்த மற்றுமொரு குழுவினர் போராட்டக்காரர்கள் மீது சாணத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன் மோதலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து நேற்று மாலை நிதியமைச்சின் செயலாளரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்தோடு முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, நாங்கள் அமைதியான முறையிலேயே போராட்டத்தை முன்னெடுத்தோம்.
ஆனால், அங்கு வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் எம்மைப் பயமுறுத்தியதோடு, சாணத்தை கொண்டும் தாக்குதல் நடத்தினர்.
88, 89 காலப்பகுதியை நினைவூட்டி, எம்மை நாய்களைப் போல சுட்டுக்கொல்லப் போவதாகத் மிரட்டினர். இது 'தேசிய மக்கள் சக்தி' அல்ல, 'தேசிய அசுத்த சக்தி' என்பதை அவர்களின் இச்செயல் காட்டுகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளோம்.
80 கோடி ரூபாவுக்கும் அதிகமான மக்கள் பணத்தை மோசடி செய்துவிட்டு, அமைச்சின் செயலாளர் ஒளிந்துகொள்கிறார். நிதி அமைச்சின் செயலாளர் பதவிக்கு அவர் தகுதியற்றவர். அவர் பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது.
எம் மீது தாக்குதல் நடத்தியவர்களை 48 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கிறோம் என்றார்.