தமிழகத்தில் விடாது கொட்டிதீற்கும் மழை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்?
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த காண மழைக் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அணுகு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் இரு தினங்களுக்கு மழை குறித்து வானிலை ஆய்வு மையம் எக்காரிகை விடுத்துள்ளதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்பட காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.