வவுனியாவில் வெசாக் கொண்டாட்டத்தை பார்வையிட குவிந்த தமிழ் மக்கள்!
வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகள் இம்முறை வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்று வருவதுடன், அதனை பார்வையிட அதிகமான தமிழ் மக்கள் சென்று வருவதையும் காண முடிகிறது.
வவுனியாவின் பிரதான வெசாக் கொண்டாட்ட நிகழ்வு கண்டி வீதியில் அமைந்துள்ள போதிதட்ஷணராமய விகாரையில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
இந்த நிகழ்வின் விசேட வழிபாட்டை தொடர்ந்து மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
விகாரையைச் சூளவும் ஏ9 வீதியிலும் புத்தரின் பல்வேறு வடிவங்களையும் போதனைகளையும் தாங்கிய வெளிச்ச கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பெரும் திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அதனை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும், வவுனியாவில் பல இடங்களிலும் வெசாக் கூடுகளும் பௌத்த கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.