50 ஆண்டுகளுக்குப் பின் குருவை நேருக்கு நேர் சந்திக்கும் சூரியன்; இந்த இராசிக்காரர்கள் ஒரே இரவில் அம்பானி ஆகப் போறீங்க
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. இதன் விளைவு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 12 ஆம் தேதி திரி ஏகாதச யோகம் உருவாகிறது.
இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இந்த முறை சூரியன் வியாழன் இருவரும் 60 டிகிரி கோணத்தில் அமைந்து திரி ஏகாதச யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது.
அதிர்ஷ்டம் கிட்டும் ராசிக்காரர்கள்
தனுசு ராசி : தனுசு ராசி திரி ஏகாதச யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்க உள்ளது. உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கலாம். புத்திசாலித்தனமான முடிவுகளால் பயனடைவீர்கள். திருமணமானவர்களுக்கு உறவுகள் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் கௌரவம் அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
சிம்ம ராசி : சிம்ம ராசி திரி ஏகாதச யோகம் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல பலன்களை வழங்க உள்ளது. இந்த காலத்தில் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான கடினமாக உழைப்பீர்கள். நல்ல வரன் அமையும்.
மிதுன ராசி : வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். நிலுவையில் இருக்கும் வேலைகள் நிறைவடையும். இத்தனை நாட்களாக அடைக்க முடியாமல் இருந்த கடன்கள் தீரும். புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மன மகிழ்ச்சி உண்டாகும்.