இனவாதத்திற்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சி
இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
அதன்போது கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், ஜனாதிபதியுடனான சந்திப்பு ஆரோக்கியமானதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும் அரசியல் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டார்.