நெடுந்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக தமிழக மீனவர் திசைமாறி வந்துநெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
தமிழகம் இராமேஸ்வரம் இராமனாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) குறித்த தமிழக மீன்பிடியாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.