தமிழக முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு பயணம்!
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியை மையப்படுத்தி , தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) இரவு லண்டனுக்கு செல்லவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக அதன்படி, முதல்வர் விஜய் இன்று இரவு 10 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, துபாய் வழியாக லண்டன் செல்லவுள்ளார்.

16 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பார்
அவர் செப்டம்பர் 16 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பார் என்றும், மீண்டும் துபாய் வழியாக செப்டம்பர் 17 ஆம் திகதி காலை 8 மணிக்குச் சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இந்தப் பயணத்தின்போது முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பார்கள். லண்டனில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார்.
அங்கு உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்குத் தமிழ்நாட்டை ஒரு சிறந்த இடமாக அவர் முன்னிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக மாநிலத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் சென்றுள்ளனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரிட்டிஷ் தலைநகரைச் சென்றடைந்துள்ள நிலையில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவும் இக்குழுவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலச் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.