என்னை காலி முகத்திடலில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள் ; CIDயில் முன்னிலையான தமிழ் எம்.பி
பொதுமக்களின் அல்லது அரசாங்கத்தின் சொத்துக்களை நான் சூறையாடியிருந்தால் அந்த குற்றம் உறுதிசெய்யப்பட்டால் என்னை காலி முகத்திடலில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எனக்கு உயிருக்கு பயமில்லை...
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சட்டம் அனைவருக்கும் சமனாக இருக்க வேண்டும். என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் என்னை சுட்டுக்கொல்லுங்கள் எனக்கு உயிருக்கு பயமில்லை. ஆனால் 2150 ரூபாய் வாங்கிதருவோம் என வாக்கினை பெற்றுக்கொண்டவர்கள் அதனை பெற்று கொடுக்க வேண்டும்.
நான் கையெழுத்திட்டு மலையக மக்களுக்கு வாங்கி கொடுத்த 1350 ரூபாய் சம்பளமே தற்போதும் மலையக மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது.
மக்கள் எங்களுக்கு தற்காலிக ஓய்வு கிடைக்கபெற்றுள்ளது அவர்களுக்காக சேவையாற்ற நாம் தயார் என குறிப்பிட்டுள்ளார்.