முன்னறிவித்தல் இன்றி முடக்கப்பட்ட தமிழ்கார்டியன்!
முன்னறிவித்தல் இன்றி இன்ஸ்டகிராமிலிருந்து தமிழ்கார்டியன் ஆங்கில செய்தி இணையத்தளத்தின் பக்கம் செயல் இழக்கச்செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உரிய முன்னறிவித்தலோ, உரிய விளக்கமோ வழங்கப்படாமல் இன்ஸ்டகிராமில் தமிழ் கார்டியன் செயல்இழக்கச்செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள தமிழ் கார்டியன், இது அவசியமற்ற ஆபத்தான இணைய தணிக்கைக்கு நிகரான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமை தொடர்புகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் எங்கள் இன்ஸ்டகிராம் பக்கம் செயல் இழக்கச்செய்யப்பட்டுள்ளமை அறிக்கையிடும் எங்கள் முயற்சிகளிற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழ் கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.
அதோடு பாரிய தளமொன்றை சேர்ந்தவர்களிற்கான எங்கள் பணியை இது மௌனமாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எங்கள் தமிழ் பத்திரிகையாளர்கள் நாளாந்தம் போராடும் ஒடுக்குமுறை தணிக்கை அநீதிக்கு இன்ஸ்டகிராம் துணைபோகின்றதாகவும் தமிழ் கார்டியன் தெரிவித்துள்ளது.