இலங்கையில் உலக சாதனை படைத்த தமிழ் சிறுமி!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் சிறுமி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் இருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலையம் வரை 2 கிலோ மீற்றர் தூரத்தினை நடந்து சிறுமி சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டி இன்றைய தினம் (31-07-2023) மஸ்கெலியா பிரதான வீதியில் பிரவுண்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
மேலும் குறித்த போட்டியை மஸ்கெலிய மாவட்ட வைத்திய அதிகாரி ஆரம்பித்து வைத்துள்ளார்.
மஸ்கெலியா சென் ஜோசப் ஆரம்ப பிரிவு பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் விக்னேஸ்வரன் சஸ்மிதா என்ற சிறுமியே 2 கிலோ மீற்றர் தூரத்தை 18 நிமிடங்களில் நடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரை நடை பயணமாக வந்து சாதனை படைத்துள்ளார்.
ஆகையால் தானும் ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்ற நோக்கில் தனது முதலாவது நடை பயண சாதனையை சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டதுடன், மலையகத்திலுள்ள ஏனைய சிறுவர்களும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.
பிரவுன்லோ தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சாதனை நடை பயணத்தில் கலந்துகொண்ட சிறுமிக்கு பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதுடன் சோழன் உலக சாதனை சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சோழன் இலங்கை கிழைத்தலைவர் யூட் நிமலன் பிரதேச பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.