தை முதல் கொடிக்கட்டி பறக்கபோகும் ராசிகள்.. உங்கள் இராசியும் இருக்கா?
ஜோதிட விதிகளின்படி, ஒரே ராசியில் மூன்று கிரகங்கள் சேர்வதை திரிகிரக யோகம் என்கிறார்கள். 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பிரவேசம் செய்கிறார்.
அடுத்த நாள் 14-ல் சூரியன், 17-ல் புதன் இணைகின்றனர். இதனால் திரிகிரக யோகம் ஏற்படுவதால், சில ராசிக்காரர்கள் பல நன்மைகள் பெற இருக்கின்றனர்.

கிடைக்கவுள்ள நன்மைகள்
ரிஷப ராசி: நிதி வளம் பெருகும் ரிஷப ராசியை சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார். சனி பகவானின் சொந்த ராசியில் உருவாகும் இந்த திரிகிரக யோகம் ரிஷபத்துக்கு பல நன்மைகளை வழங்க இருக்கிறது. இக்காலத்தில் பல்வேறு வழிகளிலிருந்து பெரும் பண வருவாய்கள் உண்டு. பணம் வேகமாக சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். சுப நிகழ்வு, வீடு, கார், நிலம் போன்ற சொத்துகளில் முதலீடு செய்ய ஒரு சரியான காலம் ஆகும்.
துலாம் ராசி: செல்வ ஆடம்பரம் உச்சம் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக யோகம் சிறப்பு காலத்தைத் தரும். வாழ்க்கைக்கு தேவையான செல்வமும், சொகுசும் பெருகும். நீண்ட பயணங்கள் அல்லது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழிலுல் வளர்ச்சி அடைவது உறுதி. வணிகர்கள் திடீர் லாபங்கள் பெறுவர். புதிய வாகனம், சொத்து வாங்கல். சமூகத்தில் மரியாதை ஆகியவற்றை உயரும். மேலும், விவசாயம் செய்து வருபவர்களுக்கு திரிகிரக யோகம் பல நன்மைகளை அளிக்கும்.
தனுசு ராசி: மகிழ்ச்சி, புகழ் தனுசு ராசிக்காரர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். நிதி லாப வாய்ப்புகள் வலு பெறும். பண வரவுகள் ஏற்படும். வாழ்வில் இன்பம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் மேலும் உயரும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை நன்றாக பார்த்துக்கொள்வார்கள்., உங்கள் பேச்சுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் பெரும் வளர்ச்சி அடையும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். வீடு வாங்குதல், பழைய வீட்டை புதுப்பித்தல் போன்ற பனிகள் நிறைவேறும்.
மகர ராசி: அனைத்திலும் வெற்றி மகர ராசியின் முதல் இடத்தில் (லக்னம்) இந்த திரிகிரக யோகம் உருவெடுக்கிறது. இதனால் மகர ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகள் பிறக்கின்றன. திருமணம் தேடுவோருக்கு சரியான துணை அமையும். தொழிலில் திடீர் உயர்வு ஏற்படும். புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமாணமானவர்களுக்கு தகாராறுகள் நீங்கி சுமுகமான வாழ்க்கை அமையும். உயர்கல்லி பயில்பவர்களுக்கு இது சாதகமான காலமாகும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். மேலும், இது போன்ற பல நன்மைகளை மகர ராசிக்காரர்கள் திரிகிரக யோகத்தால் பெற இருக்கின்றார்கள்.