மெல்போர்ன் மாகாணத்தை சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் வாகன விபத்தில் பலி
விக்டோரியா மாநிலத்தின் வடக்கு நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் மெல்போனில் வசித்து வந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மெல்போர்னிலிருந்து சுமார் 142 கிலோ மீற்றர் தொலைவில் - Bendigo பிராந்தியத்தில் அமைந்துள்ள - Toolleen என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் பொது வாகனமொன்று படகினை கட்டியிழுத்துக்கொண்டு வடக்கு நெடுஞ்சாலையில் Echuca பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வீடோன்றிலிருந்து வெளியே வந்த செடான் ரக காரோடு மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக Echuca Highway Patrol Sergeant Paul Nicoll தெரிவித்தார்.
அந்த சமயத்தில் வாகனத்தை ஒட்டிய இரத்னவடிவேல் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி மெல்போர்னின் Alfred வைத்திசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்துக்கு வேகம் காரணமல்ல என்றும் செடான் காரினை ஓட்டியவர் நெடுஞ்சாலையில் வலது பக்கம் திரும்பும்போது, மற்றைய வாகனத்துக்கு இடம்கொடுக்காததே காரணம் என்றும் சம்பவம் தொடர்பில் போலீசார் தெரிவித்தனர்.