தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு சி.சிறிதரனே பொருத்தமானவர்
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமைப்பதிவுக்கு போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு ஆதரவு கோரும் கூட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் உட்பட கட்சி உறுப்பினாகள் கலந்துகொண்டனர்.

நீண்ட நேர வாதப்பிரதிவாதங்கள்
இதன்போது நீண்டநேரம் கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான சி.சிறிதரனே அதற்கு பொருத்தமானவர் அவருக்கு உறுப்பினர்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வடகிழக்கு மண்ணிலே தமிழர்களுக்கான ஆட்சிமுறை அமைவதற்கு முழுமையான செயற்பாடுகளை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதன்போது தெரிவித்தார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        