நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகும் கனவு ஒருபோதும் பலிக்காது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் புதல்வரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்கக் கூடிய சாத்தியங்கள் ஒருபோதும் கிடையாது என சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டார்கள்
ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலை மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள். அவர்களுடைய வரலாறு தற்பொழுது குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்டது என சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது என்றும் அவர் கூறினார். நாமல் ராஜபக்சசை ஜனாதிபதியானால் புதிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படும் கருத்துக்கள் நகைப்பிற்குரியவை என கூறிய சமீர பெரேரா, பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டும் தீவிர சேறு பூசல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவு படுத்தக்கூடிய வகையில் ராஜபக்ஷ - ரணில் விக்மரமசிங்க மிக இழிவான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் கல்வி அரசியல் அமைப்பு நடவடிக்கைகள் திறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வி வணிக மயப்படுத்தப்படுவதனை வன்மையாக கடுமையாக எதிர்ப்பதாகவும், குறிப்பாக பாடசாலைகளை மூடும் திட்டம் ஏற்புடையது அல்ல எனவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.