பிரபல தென்னிந்திய குணச்சித்திர நடிகர் காலமானார்! சோகத்தில் திரையுலகம்
தென்னிந்திய காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி 67 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்றைய தினம் (02-09-2023) காலமானார்.
இவர் நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் சகோதரருமானவர்.
ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து ’அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், விக்ரம், சத்யா மற்றும் அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
கடைசியாக நேற்றுமுன்தினம் வெளியான யோகிபாபுவின் லக்கிமேன் படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், ஆர்.எஸ்.சிவாஜியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.