3 வாகனங்கள் மீது வீழ்ந்த புளியமரம்!
களுத்துறை நகர மண்டபத்துக்குப் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் உட்பட மூன்று வாகனங்கள் மீது புளியமரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (26) மாலை இடம்பெற்றுள்ளது.
எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை
இந்நிலையில் சொகுசு கார் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது மரம் வீழ்ந்தபோது, முச்சக்கரவண்டிகளில் இருவர் மாத்திரமே இருந்ததாகவும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேசமயம் மூன்று வாகனங்களும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சொகுசு காரில் வந்த நபர் தனது பிள்ளையின் வகுப்பு முடிந்து பிள்ளையயை காரை நோக்கி அழைத்துவரும்போது மரம் வீழ்ந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.