சுபக தொழில்நுட்பவியல், சுஜாத தியணி கொடுப்பனவுகளை அதிகரிக்க கலந்துரையாடல்
கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுபக", "தொழில்நுட்பவியல்" மற்றும் "சுஜாத தியணி" புலமைப்பரிசில் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக , "சுபக", "தொழில்நுட்பவியல்" மற்றும் "சுஜாத தியணி" புலமைப்பரிசில் திட்டங்களுக்கு காலத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளை கூடுதலான மாணவ மாணவிகளுக்கு வழங்கும் வகையில் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

புலமைப்பரிசில் கொடுப்பனவு
இதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் "சுஜாத தியணி" மற்றும் "தொழில்நுட்பவியல்" புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் மாதந்தம் வழங்கப்படும் 750 ரூபாய் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிப்பதற்கும், புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 950 இலிருந்து 1000 ஆக அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அனைத்து கொடுப்பனவுகளையும் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மேற்கொள்வது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
இலங்கையில் துப்பாக்கி முனையில் இரு பெண்கள் உட்பட கைதான ஆண் ; வீட்டிற்குள் காத்திருந்த பெரும் அதிர்ச்சி
மேலும், மாணவ மாணவிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைப் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை துரிதமாக செலுத்தி முடிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.