ஆப்கான் பொலிஸாரை கண்ணை கட்டி சரமாரியாக சுட்டுகொன்ற தலிபான்கள்: பதைபதைக்கும் காணொளி
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபன்கள் காபூல் உட்பட அனைத்து நகரங்களின் கட்டுப்பாட்டையும் தங்களுடைய வசமாக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் அருகே உள்ள பாட்ஜிஸ் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் ஹாஜி முல்லா அச்சாக்ஸாயை தலிபான்கள் புதன்கிழமை சுட்டுக்கொன்றனர்.
அவர் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை ட்விட்டரில் பரவிய ஒரு காணொளியில், அச்சாக்ஸாய் முழங்காலில் மண்டியிட வைப்பட்டு, தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த காணொளியை தலிபான்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டனர். அச்சக்சாயை தனிப்பட்ட முறையில் அறிந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் நாசர் வசிரி, இந்த காணொளி மற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
The security commander of Badghes province of #Afghanistan was killed by ISI agents #Taliban today after that he surrendered.
— Nadia Momand (@NadiaMomand) August 19, 2021
This is the change and the new Taliban pic.twitter.com/AI5dgrIxHm
ஆப்கானிஸ்தான் சிவில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த இராணுவ முக்கியஸ்தர்களில், தலிபான்களால் நீண்டகாலமாக குறிவைக்கப்பட்டிருந்தவர்களில் அச்சாக்ஸாயும் ஒருவர். “அவர் தலிபான்களால் சூழப்பட்டார், நேற்றிரவு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை.
தலிபான்கள் அச்சாக்ஸாயை குறிவைத்தனர், ஏனெனில் அவர் ஒரு உயர் மட்ட உளவுத்துறை அதிகாரி.” என்று வசிரி கூறினார்.
நசீர் வசிரியும் மற்ற மூத்த ஆலோசகர்களும் சமீபத்தில் ஒரு ஒன்லைன் தனியார் சட்டிங் குரூப் ஒன்றை அமைத்திருந்தனர், அதில் சிவில் அரசாங்கத்துடன் பணிபுரிந்த 100 ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அடங்குவர் என்று வசிரி கூறினார்.
கவர்னர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த ஆலோசகர்கள், இந்த குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர்.
இந்த குழுவின் நோக்கம் ஒவ்வொரு தனிநபரின் இருப்பிடத்தையும் சரிபார்த்து, அவர்கள் பாதுகாப்பாகவும் தலிபான்கள் சென்றடையாதவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும்.
இவரைப்போல, ஆப்கானின் கிழக்கு பிரதேசத்திலுள்ள லக்மானின் முன்னாள் கவர்னர் அப்துல் வாலி வாஹிட்ஸாய் மற்றும் மாகாணத்தின் முன்னாள் காவல்துறைத் தலைவர் லோத்ஃபுல்லா கம்ராம் ஐந்து நாட்களுக்கு முன்பு தலிபான்களி டம் சரணடைந்தனர், ஆனால் அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் நிலையை எண்ணி உறவினர்கள் கலங்கியுள்ளனர்.
கஜினி மாகாண முன்னாள் காவல்துறைத் தலைவரான முகமது ஹஷேம் கால்ஜியையும் காணவில்லை.