இலங்கையில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடர்!
2024 மற்றும் 2027 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இடையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கிண்ணத் தொடர்களை நடத்தும் நாடுகளின் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் (13-11-2022) அறிவித்துள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை இலங்கை பெற்றுள்ளது.
இதனைவிட 2024 மற்றும் 2027 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களை நடத்த இலங்கைக்கு மேலதிகமாக சிம்பாப்வே, நமீபியா, மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ICC 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண தொடர் 2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்படும்.
அடுத்த தொடர் 2026 ஆண்டில் சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடத்தப்படும்.
மேலும், ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடர், 2025 ஆம் ஆண்டு மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெறவுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளால் இணைந்து நடத்தப்படும்.