ரி20 போட்டி; வெற்றிவாய்ப்பு குறித்து முரளீதரன் கூறியது
இது சாத்தியமில்லை என நீங்கள் கருதும் சில விடயங்கள் கிரிக்கெட்டில் சாத்தியமாகியுள்ளதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ரி20 போட்டிகளில் எந்த அணியும் வெற்றிபெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1996 இல் நாங்கள் வென்றதை போல இந்த முறை எந்த அணி வெற்றிபெறும் என்பது தெரியாது நாங்கள் வெற்றிபெறுவோம் என அன்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
நான் அந்த தொடரில் விளையாடினேன் நாங்கள் அனேக போட்டிகளில் தோற்போம் என்றே தான் நினைத்தாகவும், இறுதிப்போட்டிக்கு செல்வோம் என நினைக்கவில்லை ஆனால் எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் நாங்கள் இறுதிப்போட்டிக்கு சென்றோம் எனவும் அவர் கூறினார்.
அந்த அணி போன்று திறமைவாய்ந்த அணி தற்போதுள்ளது என நான் தெரிவிக்கவில்லை ஆனால் கிரிக்கெட்டில் சாத்தியமற்ற விடயங்களை சாதிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரி20 போட்டிகளில் மகேல ஜெயவர்த்தன ஆலோசகராக செயற்படுவதால் தகுதிகாண் போட்டிகளில் இலங்கை வெற்றிபெறும் என முரளீதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மகேல ஜெயவர்த்தனவின் பிரசன்னம் பெரிய விடயம்,கடந்த ஆறு ஏழு வருடங்களாக இந்த இளைஞர்களிற்கு எந்த வித வழிகாட்டுதல்களும் இல்லாதநிலை காணப்படுகின்றது அவர் குறுகிய நாட்களிற்கே வழிகாட்டியாக செயற்படப்போகின்றார் என்பது எனக்கு தெரியும்.
ஆனால் ரி20 போட்டிகளில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர், உலகின் எல்லாப்பகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்,இந்த போட்டிகளை எப்படி விளையாடவேண்டும் என்பது அவருக்கு தெரியும் என கூறிய முரளிதரன், அவர் தனது அனுபவங்களை இலங்கை அணி வீரர்களுடன் பகிர்ந்துகொள்வதை பார்ப்பது சிறப்பான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.