மட்டக்களப்பு எம்.பியின் சின்னத்தனம்; வளர்த்தது சரியில்லை! எம்.ஏ.சுமந்திரன் விசனம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அவதூறு ஏற்படுத்தும் விதமான காணொளி காட்சிகளை வெளியிட்ட, மட்டக்களப்பு தமிழ் எம் பி இன் சமூகவலைத்தள குழு மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்நாடாளுமன்றத்தில் வலிறுத்தினார்.
கடந்த யூலை மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு வந்த இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உதவியாளர்களின் உதவியுடன் படிகளை கடந்த செல்வதை காணொளியாக எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், குறிப்பிட்ட இணையத்திற்கு வழங்கினார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சனையை எழுப்பிய எம்.ஏ.சுமந்திரன், அந்த தளத்தை நிர்வகிப்போர் மீது கடுமையான நடவடிக்கையெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அத்துடன், அந்த வீடியோவை எடுத்து, வெளியிட பின்னணியில் செயற்பட்ட சின்னத்தனமாக காரியத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு எம்.பி யார் என்பதையும் அவர் சூசகமாக தெரிவித்தார்.
“இது வளர்ப்பு சரியில்லை. வளர்க்கிற பிள்ளைகளை, வளர்த்தது சரியில்லை“ என்றும், நாடாளுமன்ற சிசிரிவி கமராக்களின் உதவியுடன் இந்த சின்னத்தனத்தில் ஈடுபட்ட எம்.பியை அடையாளம் காண வேண்டுமென்றும் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.