தமிழர் பகுதியில் நீதிமன்ற சாட்சிக்காக சென்றவர்கள் மீது வாள்வெட்டு
இலங்கை துறைமுகத்துவாரப் பகுதியில் இருந்து திருகோணமலை - மூதூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்தில் பயணித்த மூதூர் நீதிமன்ற சாட்சிகள் ஐந்து பேரே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பேருந்தில் பயணித்தவர்களில் மூதூர் நீதிமன்றம் ஒன்றில் சாட்சியமளிக்கச் சென்ற ஐந்து நபர்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அக்குழுவினர் குறித்த ஐந்து நபர்களையும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஐந்து நபர்களும் பலத்த காயங்களுடன் உடனடியாக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் தற்போதைய நிலை குறித்த மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
தாக்குதலை மேற்கொண்ட முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட குழுவினர், குறித்த வாள்வெட்டு சம்பவத்தை முடித்த பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
காவல்துறையினர் தீவிர விசாரணைஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இத்தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற சாட்சிகள் திட்டமிட்டு தாக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.